உலகின் இளம் கிராண்ட் மாஸ்டரை தனது வீட்டிற்கு அழைத்த விஸ்வநாதன் ஆனந்த்

சதுரங்க போட்டியில் உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டரான பிரகானந்தா தனது திறமை மூலம் விஸ்வநாதன் ஆனந்தை கவர்ந்தார். ஐந்து முறை செஸ் சாம்பியனான ஆனந்த் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு வியாழக்கிழமை பிரகானந்தாவை அழைத்தார். பிரகானந்தாவுடன் இரண்டு மணி நேரம் செஸ் விளையாடிய ஆனந்த் அவரால் கவரப்பட்டார்.
praganandhaa
சதுரங்க போட்டியில் கட்டங்களை நகர்த்த பிரகானந்தா கையாளும் யுக்தியை ஆனந்த் புரிந்து கொண்டார். சில விளையாட்டை காட்டும் படி ஆனந்த் பிரகானந்தாவிடம் கேட்டுள்ளார். பிரகானந்தா காய்களை நகர்த்திய விதம் எட்டு வருடங்களுக்கு முன்பு தான் விளையாடியது போல் இருந்ததாக ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

”சதுரங்கத்தில் என்னுடைய நகர்வையும், பிரகானந்தா நகர்வையும் ஒப்பிட்டு பார்த்தேன். பிரகானந்தா எளிமையாக காய்களை நகர்த்தி கொண்டு சென்றார். ஏனெனில் அவர் கிராண்ட் மாஸ்டர் ” என்று ஆனந்த் மகிழ்ச்சியுடன் கூறினார். விஸ்வநாதன் ஆனந்த் உடனான சந்திப்பு குறித்து பிரகானந்தா கூறுகையில் ” அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார். எனது தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் ஒரு சில வழிமுறைகளை கற்றுக்கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

ஜூன் 24ம் தேதி இத்தாலியில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 12வயதுடைய சிறுவனான பிரகானந்தா உலகின் 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.