விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு… கமல் ட்வீட்

மல் நடிக்கும் விஸ்வரூபம் – 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  நடந்துவருகிறது.  இத குறித்து கமல் ட்விட் செய்துள்ளார்.

இந்தப்படத்தல் நடிப்பதோடு,, இயக்கவும் செய்கிறார் கமல்.  இதன் முதல் பாகம்,  பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013ம் வருடம் வெளியானது.

அப்போதே  இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பை நடத்திவிட்டார் கமல் என்று சொல்லப்பட்டது. ஆகவே இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இரண்டாம் பாக படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில், விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சில நாட்களுக்கு முன் துவங்கினார்.

தற்போது இந்தப் படத்தின்  படப்பிடிப்பு குறித்து, கமல்ஹாசன் ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் கமல், ஆண்ட்ரியா உள்ளிட்டோருடன் மேலும் சிலர் ராணுவ சீருடையில் இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள ஓ.டி.ஏ. ராணுவ பயிற்சி மையத்தில் படப்பிடிப்ப நடக்கிறது. இந்தியாவிலையே பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையம் இதுதான்.

இது குறித்து கமல் தன் ட்விட்டர் பதிவில், “பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

விஸ்வரூபம் – 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.