ஆகஸ்ட் 10ல் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ்

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இதன் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.