பிக்பாஸ் மேடையில் வரும் 29ந்தேதி விஸ்வரூபம்2 பட பாடல் வெளியீடு

மல் நடித்து வரும் விஸ்வரூபம்2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கமல் தற்போது பிக்பாஸ்2 நிகழ்ச்சியை  நடத்தி வருகிறார்.

விஸ்வரூபம் படத்தின் தமிழ் டிரெய்லரை தமிழில் ஸ்ருதிஹாசனும், இந்தி ட்ரெய்லரை அமீர் கானும் , தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும்    கடந்த 11 – ம் தேதி  வெளியிட்ட நிலையில், விஸ்வரூப2 படத்தின் பாடலை பிக்பாஸ் மேடையில் வெளியிட கமல் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி வரும் 28ந்தேதி விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியிடப்பட உள்ளது.

விஸ்வரூபம்2 படத்தில்  கமலுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களை வைரமுத்து எழுதி உள்ளார்.  தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

ஏற்கனவே  கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டீசர்  வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் பாடல்களை வரும் 29 -ம் தேதியன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.