திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு அடையாள அட்டை அவசியம் – கோவில் இணை ஆணையர்

திருவண்ணாமலை:
“திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பல கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படி கொண்டுவராத பக்தர்கள் கோயிலுக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.