பத்திரிகையாளர் ‘விசிட்டர்’ அனந்து மறைவு

சென்னை

பிரபல மூத்த பத்திரிகையாளர் விசிட்டர் அனந்து என்னும் அனந்த கிருஷ்னன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார்.

புலனாய்வு இதழ் இயலின் முன்னோடி என கருதப்படும் பத்திரிகையாளர்  அனந்த கிருஷ்ணன்.  இவர் விசிட்டர் அனந்து என அழைக்கப்படுபவர் ஆவார்.    இவர் கொட்டிவாக்கம் பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

விசிட்டர் அனந்து என்ற அனந்த கிருஷ்ணன் இன்று அதிகாலை ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.அவரது உடல் கொட்டிவாக்கம் பத்திரிக்கையாளர் குடியிருப்பில் உள்ள அவர் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1 மணிக்கு இயற்கை எய்திய அனந்துவின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விசிட்டர் அனந்துவின் இறுதி சடங்கு பெசன்ட் நகர் மயானத்திற்கு மாற்றாக கோட்டுர்புரம் மயானத்தில் மாலை 3.30 மணியளவில் பெறுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது

மறைந்த  புலனாய்வு இதழ்களின் முன்னோடியான விசிட்டர் அனந்துவின் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.