சென்னை விமான நிலையம் : பார்வையாளர் கட்டணம் உயர்வு

சென்னை

சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில்பார்வையாளர் கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், மற்றும் பன்னாட்டு முனையங்களில் கடந்த 2012 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.   அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.   2012ஆம்  ஆண்டில் இருந்து உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.   ஆனால் பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க ரூ.70 கட்டணம் வசூலிக்கப்பட்டது.  இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பன்னாட்டு மையத்தின் அனுமதிக் கட்டணம் உயர்த்தப்படுத்தப் பட்டுள்ளது.    நேற்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதிக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும் என திடீரென்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.