கடைசி ஆசை நிறைவேறாமல் மரணமடைந்த விசு….!

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று 22 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவருக்கு வயது 75. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

75 வயதில் இறந்த விசுவுக்கு கடைசி காலத்தில் இருந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. 1986ல் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விசு திட்டமிட்டிருந்தார்.

அதற்காக கதை எழுதி பல தயாரிப்பாளர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இறுதியாக அவர் நடிகை ஜோதிகாவை சந்தித்து கதையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே விசு மரணமடைந்துவிட்டார்.

2016ல் விசு மணல் கயிறு இரண்டாம் பாகம் எடுத்து குறிப்பிடத்தக்கது.