சர்வதேச செஸ் தொடர்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!

கொல்கத்தாவில் நடந்த முதல் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

anand_

சர்வதேச செஸ் தொடர் முதல் முறையாக கொல்கத்தாவில் நடந்தது. பிளிட்ஸ் முறையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த முறையில் ஒரு நகர்த்தலுக்கு 3 நிமிடம் மட்டுமே தரப்படும். இதில் 10 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தமாக நடந்த 9 சுற்றுக்களில் இந்தியாவின் ஆனந்த், 12.5 புள்ளிகள் பெற்றார்.

அதே போல் அமெரிக்க வீரர் ஹிகாரு நாகமுராவும் 12.5 பெற்றார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க, டைபிரேக்கர் போட்டி நடத்தப்பட்டது. முதல் போட்டியில் ஆனந்த் வெற்றி பெற 1–0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது போட்டி ‘டிரா’ ஆனது.

முடிவில் ஆனந்த் 1.5–0.5 என வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இந்த போட்டியில் அர்மேனியாவின் லெவான் ஆரோனியன் (12) மூன்றாவது இடம் பிடித்தார்.

You may have missed