பட விமர்சனம்: ‘விஸ்வாசம்’ குடும்ப சென்டிமென்ட் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேகத்துக்கு அஜித்தின் மாஸ் ஈடுகொடுக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்,  வெளியாகி உள்ள அஜித்தின் விஸ்வாசம், அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாச மாகவே அமைந்துள்ளது…. அஜித் ரசிகர்கள் விஸ்வாசத்தை வெற்றிப்படமாக கொண்டாடி வருகிறார்கள்..

முதல் காட்சியிலேயே “பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா?” என மாஸ் காட்டி வரும் அஜித் கிராமத்து ‘தல’யாக வலம் வந்து மக்களுக்கு விஸ்வாசமாக நடந்து கொள்கிறார்.

விஸ்வாசம் பக்கா குடும்ப சென்டிமென்ட் படம்… ஆனால் இன்றைய  டிஜிட்டல் உலகத்தில் இருந்துகொண்டு இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே சிவா புரட்டியிருப்பது சற்று நெருடல்தான்….

கிராமத்தில் நடைபெறும் திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஊர் தலைவரிடம் ஐடியா கேட்பது போன்ற காட்சிகள்… இயக்குனர் சிவா… ரஜினி ரசிகர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நினைத்துவிட்டார் போல..

தூக்குதுரை என்ற கேரக்டராக ஊர்பெரிய மனிதராக வாழும் அஜித், சில வருடங்களாக மனைவி நயன்தாராவையும் மகளையும் பிரிந்து  வாழ்கிறார்.. எதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்பதை விளக்குவதே படத்தின் கதை…

படத்தின் முதல் பாதி முழுவதும் இளமையான அஜித்தும், இரண்டாம் பாதியில் பெரிய மீசையுடன் வயதான அஜித்துமாக வந்து அஜித் மாஸ் காட்டுகிறார்… கிராமத்து பெரிசாக வரும் அஜித்.. தனது அதிரடி மதுரை பேச்சு டன் கூடிய உருட்டல் மிரட்டல் வசனங்கள் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது…

அஜித் உடன் நயன்தாரா  தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய்,விவேக் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது… இருந்தாலும் காமெடி சீன்களில் வறட்சியே தென்படுகிறது…

அதுபோல படத்தின் முதல் பாதியில் அஜித்தின் நடிப்பு நகைச்சுவையாகவும், அவரது ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல விறுவிறுப்பாக போகும் வேளையில், பிற்பாதி சீரியசாக குடும்ப சென்டி மென்டுடன்  செல்கிறது… இதுபோன்ற காட்சிகள் இளம் தலமுறையினருக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும்… பொதுமக்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள் என்பதே உண்மை…

நடிகை நயன்தாராவுக்கு என தனி ரசிகர்கள்பட்டாளமே உள்ள நிலையில், படத்தில் நயன்தாரா வீணடிக்கப்பட்டுள்ளார்.   நயன்தாராவுடனான காதல், மற்றும் திருமணம், மகள் மீதான பாசம் என தன் அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான நேரங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார்.

“பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா ? “எனத் தொடங்கி ., “என் கதையில் நான் ஹீரோடா ” ,”என் கதைல்ல நான் வில்லன்டா “என அஜித் மாஸ் காட்டி பேசும் வசனங்களுக்கு ரசிகர்களின் விசில் காதை பிளக்கிறது…

 

படத்தின் ஸ்டண்ட் காட்கிகள் எப்போதும்போல தூள்…   குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகள் மெய்சிலிரிக்க வைக்கிறது.. காட்சிக்கு காட்சி   இமானின் பின்னணி இசையும் வலு சேர்க்கிறது.

படத்தில் நயன்தாராவின் கேரக்டரில் சில சறுக்கல்கள்… டாக்டர் நயன்தாரா… தொழிலதிபர் நயன்தாராவாகிறார்… இது எப்படி என்பதை இயக்குனர் விளக்க தவறிவிட்டார்…   அதுபோல ஏற்கனவே சிவாவின் முந்தைய படங்களின் தாக்கமும் விஸ்வாசத்தில் வெளிச்சமிடுகிறது….

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு, இயக்குனர் சிவா, அஜித்துக்கு விஸ்வாசம் காட்டவில்லை என்பதுபோல தெரிகிறது… இது  அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான்…. இருந்தாலும் குடும்ப சென்டிமென்டான படம் என்பதால் அனைவரும் ஒரு முறை  பார்க்கலாம்…

அஜித் ரசிகர்கள் படத்தின்  சண்டைகாட்சிகளுக்காகவும், அவரது வெறித்தனமான வசனங்களுக்காகவும் மீண்டுமொரு பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை…

கார்ட்டூன் கேலரி