‘விஸ்வாசம்’ பிளாஸ்டிக் பாட்டில் கட்அவுட்: அஜித் ரசிகர்களின் வித்தியாசமான முயற்சி

‘விஸ்வாசம்’ படத்திற்காக  அஜித் ரசிகர்களின் வித்தியாசமான முறையில் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர். முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு கட்அவுட் தயாரித்து வைத்து பொதுமக்களின் பாராட்டுக்களையும், வரவேற்புகளையும் பெற்று வருகின்றனர்.

நடிகர் அஜித் நயன்தாரா ஜோடியாக கலக்கும் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அன்றைய தினம் ரஜினி நடிக்கும் பேட்ட படமும் வெளியாவதால் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதன் காரணமாக விஸ்வாசம் படத்தை வெற்றிப்படமாக்கும் முயற்சியில் அஜித் ரசிகர்கள் பல்வேறு வகையில் விளம்பரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் டிரைலர் பேட்டையை பின்னுக்கு தள்ளி டிரெண்டிங்கான நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கட்அவுட் வைத்து வரவேற்பு பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் ,கட் அவுட் என கலக்கி அமர்களப்படுத்தி வருகின்றனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் விஸ்வாசம் படம் வெளியாக உள்ள நிலையில்,  வாட்டர் பாட்டில்கள் மட்டுமே வைத்து பிரமாண்ட அஜித் பேனர் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். பல இடங்களில் 100அடிக்கும் மேலான அஜித் கட்அவுட் வைத்து பேட்ட ரசிகர்களை மிரட்டி வருகின்றனர்.