“விஸ்வாசம்” மோஷன் போஸ்டர் : இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது 

ஜித் நடித்துள்ள, “விஸ்வாசம்” o; மோஷன் போஸ்டர் இந்திய அளவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

விஸ்வாசம் அறிவிப்பு வந்ததில் இருந்து அதன் தகவல்கள் அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அஜித்துடன் இயக்குநர் விஜய் இணையும் நான்காவது படம் இது.  ஆகவே, எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

விஸ்வாசம் படத்தில் அஜித் இருவேடங்கலில் நடிக்கிறார்.  ஆரம்பத்தில் இளம் அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர், பின்பு அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை படமாக்கியதாக தகவல் வெளியாகியது. மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.

படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட ; படமும் பொங்கல் அன்று வெளியாகிறது. ஆகவே இரு நாயகரிகளின் ரசிகர்களும் அதீத ஆவலுடன் இப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் முறுக்கு மீசையுடன் இளம் அஜித்  காட்சி அளிக்கிறார்.  மேலும், வயதான தோற்றத்துடன் வித்தியாசமான அஜித் படமும் வெளியாகி இருக்கிறது.

இந்த போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. ட்விட்டர் தளத்தில்  சென்னை அளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்திய அளவில் முதல் 3 இடங்களில் விஸ்வாசம் ட்ரண்ட் ஆகியுள்ளது.   4 மற்றும் 5ம் இடங்களில் விஜய் நடிக்கும் 63வது படம் ட்ரெண்டாகியிருக்கிறது.

 

 

#viswasam #poster #released #twitter #india #trending