விஸ்வாசம் அதிகாலை காட்சியின்போது ‘சீட்’ பிடிக்க நடந்த மோதல்…. வேலூரில் 2 பேருக்கு கத்திக்குத்து..!

டிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை  காட்சியின்போது ‘சீட்’ பிடிக்க நடந்த மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஸ்வாசத்தை தல ரசிகர்கள் பல்வேறு கட்அவுட்கள் வைத்து பிரமாண்டமாக வரவேற்ற நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

வேலுரில் உள்ள அலங்கார் தியேட்டரில் விஸ்வாசம் படத்தை காண முண்டித்து சென்ற அஜித் ரசிகர்களிடையே இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு சண்டை தீவிரமானது. இதில்  வேலூர் அருகே உள்ள  தாராப்படவேடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் அவரது மாமா ரமேஷ் ஆயியோருக்கு கத்தி குத்து விழுந்தது.

இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தது. அதைத் தொடர்ந்து தியேட்டருக்கு வந்த காவல்துறையினர் கத்திக்குத்து காரணமாக காயம் அடைந்தவர்களை மீட்டு   வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சிறப்பு காட்சி திரையிடுவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

விஸ்வாசம் அதிகாலை காட்சியின்போது ‘…. வேலூரில் ..!