[embedyt] https://www.youtube.com/watch?v=L7TbPUOn1hc[/embedyt]

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் `விஸ்வாசம்’.படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் பணியாற்றினார்.டி.இமான் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது.

ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான், தாரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லருக்கு இசையமைத்தது இமான் என யூ-ட்யூபில் பதிவு செய்யப்பட்டு அதில் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இமான் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தன் இசையை மர்ஜவான் இந்தி படத்தின் ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அந்தப் பட தயாரிப்பு நிறுவனமோ, ஆடியோ நிறுவனமோ என்னிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.