சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியானது.
அஜித்தின் கெரியரில் முக்கியமான படமாக விஸ்வாசம் அமைந்தது.
அப்படி சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படம் மலேசியாவில் இன்று மீண்டும் வெளியாகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்து தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலேசிய தியேட்டர் உரிமையாளர்கள் அஜித்தின் விஸ்வாசம் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் திறந்த பிறகு அஜித் படத்தை மீண்டும் வெளியிடுவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.