நாளை மதியம் வெளியாகிறது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரெய்லர்

அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 1.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தயாரிப்பு குழு அறிவித்து உள்ளது-

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது-  இந்தப் படத்துக்கு டி.இமான் இசை யமைத்துள்ளார்.

தல ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தின் டிரெய்லருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பேட்ட ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து தல ரசிகர்கள் வெறித்தனமாக விஸ்வாசம் ட்ரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் ‘கொல மாஸாக இருக்கும்’ என்று படத்தொகுப்பாளர் ரூபன் தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை மதியம் 1:30 மணிக்கு டிரெய்லர்  வெளியாகும் என்ற அறிவிப்பை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.