முதலாம் இடத்தை ட்விட்டரில் பிடித்து சாதனை நிகழ்த்திய ‘விஸ்வாசம்’…!

 

2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி ‘விஸ்வாசம்’ படத்தின் ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .

தமிழகத்தில் இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்தியளவில் ட்விட்டர் தளத்தில் முதல் இடத்தைப் பிடித்து மற்றொரு சாதனையை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் #Viswasam, #LokSabhaElections2019, #CWC19, #Maharshi மற்றும் #HappyDiwali ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

‘விஸ்வாசம்’ படத்தின் இந்தச் சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனம், நன்றி தெரிவித்துள்ளது.