ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்!  சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

ழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. சமீப நாட்களாக மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  சத்துணவு மையங்கள் மூலம் ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக ஜூலை 20ம் தேதிக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.