தள்ளாத வயதில் தண்டால் எடுத்த நடிகரின் தாயார் .. கேக்குடன் மருமகள் பாராட்டு..

ண்பது வயது என்பது தள்ளாத வயது தான் ஆனால் அந்த வயதை தள்ளிவைத்து விட்டு தெம்பாக தண்டால் எடுத்தார் பிரபல நடிகரின் தாயார்.
இந்தி நடிகர் மிலிந்த் சோமன் தனது தாயாரின் 81 வது வயது பிறந்த தினத்தை வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாட தயாரானார்.
’நீயும் உம் பொண்டாட்டியும் கேக் செய்யுங்க இதோ தண்டால் எடுத்து விட்டு வருகிறேன் என்ற புறப்பட்ட தாயாரை, தண்டாலா? என்றபடி அவரை  ஆச்சர்யமுடன் பின்தொடார்ந்தார் மகன் மிலிந்த்.

ஹாலுவுக்கு சென்ற தாயார் திடீரென தரையில் கையை ஊன்றி தண்டால் எடுக்கத் தொடங்கினார். மிலிந்த் அந்த காட்சியை வீடியோ எடுக்கத் தொடங்கினார். தளராமல் 15 தண்டால் எடுத்த தாயாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார் மிலிந்த். தாயார் தண்டால் எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த மிலிந்த், 81 வயதில் இந்த பார்ட்டி 15 தாண்டால் செய்து அசத்தினார் என குறிpபிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் மிலிந்த் மனைவி அங்கிட்டா மாமியாருக்காக தயாரித்த கேக் கொண்டு வந்து தர அதை வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார் 81 வயது தாய்.
மிலிந்த் தமிழ் படங்களிலும் நடித்திருக் கிறார். சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம், பார்த்திபன் நடித்த வித்தகன், கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.