விரைவில் இயக்குநராகிறார் விவேக்…!

காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் விவேக் . அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

கமலுடன் மட்டுமே நடிக்காமல் இருந்தார். அதுவும் தற்போது கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில் தற்போது தனக்குத் திரையுலகில் கிடைத்த அனுபவத்தின் மூலம் இயக்குநராக முடிவு செய்துள்ளார் விவேக்.

விரைவில் முன்னணி நடிகரை இவர் இயக்கும் அறிவிப்பு வெளியாகும் என இவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் தெரிவித்தனர்.