கமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் விவேக்…!

கமல் – ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டது .ஆனால் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன் 2’ பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு மற்றும் சமுத்திரக்கனி இணைந்துள்ளனர் .

இந்நிலையில் நடிகர் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இதுவரை கமலுடன் நடிகர் விவேக் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.