முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் இணையும் விவேக்….!

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் .

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஊட்டியில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக். விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை.