நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் மாரடைப்பால் காலமானார்

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86 .

சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மணியம்மாள் உடல், இரவு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 10.30 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

தாயாரை இழந்த நடிகர் விவேக்கிற்கு திரைத்துறை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.