வாஷிங்டன்:

ஜோ பைடன் ஆட்சியில் விவேக் மூர்த்தி சுகாதார குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க சர்ஜன் ஜெனரலான இந்திய அமெரிக்கர் விவேக் மூர்த்தி, தற்போதைய ஜோ பைடனின் சுகாதார குழுவில் ஒரு பெரிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவேக் மூர்த்தி தற்போது பைடன் ஹாரிஸ் டிரான்சிஷன் கோவிட் 19 பணிக்குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜோ பைடன் அடுத்த வாரம் சுகாதார மற்றும் மனித சேவை செயலாளருக்கான தனது தேர்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விவேக் மூர்த்தியும் இதில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் மூர்த்தி அமெரிக்காவின் 19 ஆவது சர்ஜன் ஜெனரலாக டிசம்பர் 15, 2014 முதல் ஏப்ரல்-21 2017 வரை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் மென்மையாக பேசுபவராக பெயர் பெற்ற விவேக் மூர்த்தி கடந்த 2017 ஆம் ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்பால் ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார், கடந்த 2014 ஆம் ஆண்டு பாரக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்திலும் இவர் சர்ஜன் ஜெனரலாக இருந்துள்ளார்.

சர்ஜன் ஜெனரலாக பணியாற்றிய போது, மூர்த்தி எபோலா வைரஸ் மற்றும் ஃசிகா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடினார்.

ஆரம்ப காலங்களில் ஈஆர் மருத்துவராக இருந்த போது, விவேக் மூர்த்தி ஏராளமான துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களுக்கு, சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார்.