விவேக் ஓபராய் நடிக்கும் ‘பி.எம். நரேந்திர் மோடி’: ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடிக்கும் ‘பி.எம். நரேந்திர் மோடி’: படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் படம் எடுத்து, அது சர்ச்சையில் சிக்கி உள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கும் பி.எம்.நரேந்திர மோடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ள பயோபிக் படமான ‘பி.எம். நரேந்திர மோடி’திரைப்படத்தில் விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை விவேக் ஒபராய் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். அதை விவேக் ஓபராய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளார். அத்துடன் இந்த நம்ப முடியாத பயணத்தில் மக்களின் பிரார்த்தனைகளையும் ஆசீர்வாதங்களை யும் கேட்பதாக விவேக் ஓபராய் குறிப்பிட்டுள்ளார்.

23 மொழிகளில் வெளியாக உள்ள  பி.எம். நரேந்திரமோடியின் படப்பிடிப்பு இந்த மாதத்திலேயே தொடங்கி மேமாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியாகும் வகையில் படத்தின் படப்பிடிப்பு விரைந்து நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த படத்திற்கு தேவையான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தை ஓமங் குமார் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மேரி கொம், சரப்ஜித் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி