இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 13,486 பேரிடம் 14,376 மாதிரிகள் பெறப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சானிடைசர்களின் விலையையும், மருத்துவர்களின் சேவையையும் ஒப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கரோனா பாதிப்பு காரணமாக வியாபாரிகள் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களின் விலையை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளனர். மருத்துவர்கள் தங்கள் சேவையை இலவசமாகச் செய்கின்றனர். இதுதான் வித்தியாசம். இந்தப் போரில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மனிதத்தின் உண்மையான படைவீரர்களாகத் திகழும் அனைத்து மருத்துவர்களுக்கும் என்னுடைய சல்யூட்” என தெரிவித்துள்ளார் விவேக் ஓபராய். .