ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது வரை பார்க்காத விவேக்கை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஆந்திரா ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.