சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம் : விவேக்

திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 82 மணி நேர முயற்சிக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார் .

சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது .
சுஜித் குழியில் விழுந்தவுடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் சுஜித் மறைவு தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் “கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்துக் களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?” என்று தெரிவித்துள்ளார்

கார்ட்டூன் கேலரி