மும்பை

தாம் 2007 ஆம் வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எண்ணிய போது விவியன் ரிச்சர்ட்ஸ் தம்மை சமாதானம் செய்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.

கடந்த 2007 வருடம் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி பங்கேற்றது.   அப்போது இளம்புயல் என பாராட்டுக்களை குவித்து வந்த சச்சின் டெண்டுல்கரும் அணியில் இடம் பெற்றிருந்தார்.  அந்த போட்டியில் இந்திய அணி வங்க தேசம் மற்றும் ஸ்ரீலங்கா அணியிடம் தோல்வி அடைந்தது.

இதை ஒட்டி ராகுல் டிராவிட் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.   அத்துடன் இந்த போட்டியில் 3 போட்டிகளில் சச்சின் மொத்தம் 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்   அதனால் மனம் உடைந்த அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எண்ணி உள்ளார்.  இது குறித்து அறிந்த் மேற்கு இந்திய தீவு அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக சச்சின் டெண்டுல்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட விவியன் ரிச்சர்ட்ஸ் சுமார் 45 நிமிட நேரம் பேசி சமாதானம் செய்துள்ளார்.  அதை ஒட்டி தனது முடிவை சச்சின் மாற்றிக் கொண்டுள்ளார்.   இது குறித்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்  அடுத்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்றதை குறிப்பிட்டுள்ளார்.