வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை:

ரி எய்ப்பு மோசடி காரணமாக கடந்த ஒரு வாரமாக பிரபலமான மணல் ஏற்றுமதி யாளர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், அந்த நிறுவனம் சுமார் 800 கோடி ரூபாய் வரை எரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

மேலும், அந்த நிறுவனங்களில் ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வும் கூறி உள்ளது.

வரி எய்ப்பு மோசடி காரணமாக பிரபலமான மணல் ஏற்றுமதியாளர் வைகுண்ட ராஜனின் வீடு மற்றும் அவரது  வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

விவி மினரல்ஸ் மற்றும் அதன் சார்புடைய நிறுவனங்கள் மற்றும் வைகுண்ட ராஜனின்  தொலைக்காட்சி நிறுவனம் உள்பட  தமிழகம் முழுவதும் உள்ள  100க்கும் மேற்பட்ட இடங்களில்  500க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து வைகுண்டராஜனின்  விவி மினரல்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய வங்கி  30 வங்கி கணக்குகள் மற்றும் 24 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற சோதனை காரணமாக  ரூ.8 கோடி பணம்  பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாகவும், வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு  செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றும்,  வெளிநாடுகளில் 8 சுரங்கங்களை நடத்திவருவதும் தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும்,  ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது டிடிவி தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ 2.5 கோடி கொடுத்த ஆவணங்கள் சிக்கின இருப்பதாகவும் வருமானவரித் துறை கூறி உள்ளது.

போலி நிறுவனங்கள் மூலம் பல நாடுகளில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்து கண்டுபிடிப்பு. வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் மற்றும் அவரது மகன்களை சம்மன் செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.