நடு ரோடில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு வழங்கும் விசாகபட்டினம் காவல்துறை

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் காவல்துறையினர் நடு சலையில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஊட்டி வருகின்றனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் அனைவருக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஊட்டுவது முதன்மையாகும்.

அவ்வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காவல்துறையினர் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள வபகுண்டா சாலை சந்திப்பில் ஒரு ஓவியத்தை காவல்துறையினர்  வரைந்துள்ளனர்.

அதில் வீட்டில் இருப்போம், பாதுகாப்பாய் இருப்போம் போன்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதி உள்ளனர்.

இது அங்குள்ள மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.