முல்லை சித்ராவை போல அச்சுஅசலாக இருக்கும் பிரபலம்….!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் பிரபலமாக இருந்த முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் திடிரென்று இப்படி முடிவெடுத்ததால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் காவியா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்தது .

இந்நிலையில் சித்ரா போலவே உள்ள தொகுப்பாளரும், நடனக்கலைஞருமான கீர்த்தனா தினகரனின் புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.இவர் புதிய முல்லையாக நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.