சசிகலா விடுதலையா? கர்நாடக சிறைத்துறை விளக்கம்

பெங்களூரு:

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என பா.ஜ.க தலைவர் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டரில் அதிரடி தகவலை பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக என பாஜக நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் செய்திருந்தார்.இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை மூத்த அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.