டில்லி

ட கொரியாவுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் வி கே சிங் சென்று உள்ளார்.

வட கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள் உள்ளன.   வடகொரியாவுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய வாடிக்கையாளராக இந்தியா உள்ளது.   ஆயினும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அமைச்சர் யாரும் வட கொரிய நாட்டுக்கு செல்லவில்லை.   வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டு தற்போது இரு நாட்டு அதிபர்களும் சிங்கப்பூரில் சமாதான பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

மத்திய வெளிநாட்டுத் துறை இணை அமைச்சர் வி கே சிங் நேற்று வட கொரியாவுக்கு  இரு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.   அவர் தனது பயணத்தின் போது வட கொரியா பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    அத்துடன் வட கொரியா தனது அமெரிக்க பேச்சு வார்த்தையை ரத்து செய்வேன் என கூறி உள்ள நேரத்தில் இந்தியாவின் சார்பில் வி கே சிங் சென்றுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.