என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா!: ஆர்.கே. நகரில் கங்கை அமரன் பிரச்சாரம்

ன் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா. பலரது சொத்துக்களையும் அவரது குடும்பம் பிடுங்கியிருக்கிறது” என்று தான் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்து வருவதாக கங்கை அமரன் தெரிவித்தார்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடக்க இருக்கிறது. முக்கிய கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

பாஜக சார்பில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆர்.கே. நகர் முழுதும் வலம் வந்து வாக்கு கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிரச்சாரத்துக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்தார் கங்கை அமரன். அப்போது அவர், “சசிகலா குடும்பத்தால் நாட்டுக்கு கேடு. அவர்கள் எத்தனையோ பேரை மிரட்டி  சொத்துக்களை அபகரித்துள்ளனர். என்னையும் மிரட்டி என் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டார்கள். இது குறித்து ஆர்.கே. நகர் மக்களிடையே பிரச்சாரம் செய்துவருகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் , “இத்தேர்தலி்ல் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். தொகுதி மக்களின் குறைகளை போக்க முழுமையாக முயற்சிப்பேன். வாக்காளர்களிடம் நெருங்கிப்பழகி வாக்கு கேட்கிறேன். அவர்கள் வீட்டில் மீன்குழம்பு சாப்பிட்டுவிட்டு ஓட்டு கேட்பேன்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.