மாஸ்கோ

ஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்கின்சன் நோய் தாக்குதல் காரணமாக ஜனவரி மாதம் பதவி  விலகுவார் என தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 20 வருடங்களாக ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார்.  தற்போது அவருக்கு 68 வயதாகிறது.  கடந்த சில நாட்களாக அவருடைய கால் மற்றும் விரல்களின் அசைவுகளில் மாறுதல்கள் உள்ளதாகவும் அவர் தனது நாற்காலியின் கைப்பிடியை பிடிக்கும் போது வலியால் அவதிப்படுவதாகவும் அவருடைய வீடியோக்களின் மூலம் தெரிவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய அரசியல் ஆர்வலரான வாலெரி சொலொவெய் என்பவர், “புதினுக்கு பார்கின்சன் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகளால் இவை ஏற்படுகிறது.   அவருடைய குடும்பத்தினர் அவர் மீது மிகவும் அக்கறை கொண்டவர்கள்.  ஆகவே அவர்களின் விருப்பப்படி ஜனவரி முதல் பதவி விலகத் திட்டமிட்டுள்ளார்.“ எனத் தெரிவித்துள்ளார்

புதினை ராஜினாமா செய்ய அவருடைய காதலி அலினா கபெவா வலியுறுத்துவதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு உதவி அளிக்க வேண்டும் என்னும் தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளார்   இந்த மசோதா இயற்றப்பட்டால் முன்னாள் அதிபர்களுக்கு மருத்துவம் மட்டுமின்றி மற்ற உதவிகளும் அரசு வழங்க வேண்டும்.

இந்த மசோதாவின் மூலம் அவர் அவசியம் ராஜினாமா செய்ய உள்ளார் என்னும் ஊகங்கள் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.