ரஷிய அதிபர்: 66வயதாகும் புதின் மீண்டும் திருமணம் செய்யப்போவதாக அறிவிப்பு

ரஷ்யா:

66வயது ஆகும் ரஷிய அதிபர் புதின் மீண்டும் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருகிறார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மனைவி பெயர் லியுத்மிலா புதினா. இவர்களுக்கு 1983ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. லியுத்மிலா புதினா விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிவர். இந்த தம்பதிகளுக்கு  மரியா (32). கத்ரீனா (35) என  2 மகள்கள் உள்ளனர்.

புதின் லியுத்மிலா புதினா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு  இருவரும் விவாகரத்து பெற்றனர்.  இதன் காரணமாக 31 ஆண்டு கால புதினின் திருமண வாழ்க்கை இருண்டது.

அதைத்தொடர்ந்து வேறு எந்த திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வந்த புதின், தற்போது ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே புதினுக்கும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக  அரசல் புரசலாக செய்திகள் வெளியான நிலையில், அதை நிரூபிக்கும் விதமான புதின் தற்போது அறிவித்து உள்ளார்.

சமீபத்தில் மாஸ்கோவில் செய்தியாளர்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட புதினிடம் நிருபர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ‘‘நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என புதின் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். ஆனால் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் வினாடிமிர் புதின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34 ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி