ஐதராபாத்: கொரோனா காலத்தில், வீரர்-வீராங்கணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய விளையாட்டு ஆணையம், வீரர்களுக்கென்று ஒரு பாதுகாப்பான உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஐதராபாத்தில், புல்லேலா கோபிசந்த் அகடமி செயல்பட்டு வருகிறது. பேட்மின்டனில் பெண்கள் இரட்டையர் ஸ்பெஷலிஸ்ட் என்.சிக்கி ரெட்டி மற்றும் பிசியோதெரபிஸ்ட் கிரண் சி ஆகியோருக்கு கொரோனா பாசிடிவ் என்ற தகவல் வெளியான நிலையில், அந்த அகடமி உடனடியாக மூடப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது பரிசோதனையில், அந்த இருவருக்கும் நெகடிவ் ரிசல்ட் கிடைத்தது. இதனையடுத்து, அந்த அகடமி மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படாத நிலையில், வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் அவர்கள் பயிற்சியில் ஈடுபடும் வகையில், ஒரு பாதுகாப்பான உயிர்-குமிழி முறையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்களில் முக்கியமானவர் உலக சாம்பியன் பி.வி.சிந்துவின் தந்தையும், கடந்த 1986ம் ஆண்டு ஆசிய விளையாட்டில், வாலிபால் போட்டியில் வெண்கலம் வென்றவருமான பி.வி.ரமணா.