டென்னிஸ்: வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் ஆனார்

சிங்கப்பூர்::

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி பட்டம் வென்றார்.

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரை இறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 7:6 (9), 6::3 என்ற நேர் செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரை இறுதியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 6:7 (3), 6:2, 6:3 என்ற செட் கணக்கில் பிரான்சின் கரோலின் கார்சியாவை போராடி வீழ்த்தினார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் வீனஸ்:வோஸ்னியாக்கி இன்று மோதினர்.

இந்த போட்டியில் அமெரிக்காவின் வீனசை 6-:4, 6-:4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கரோலின் வோஸ்னியாக்கி பட்டம் வென்றுள்ளார்.