கொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு

சென்னை

மிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து சேவை செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி அன்று முதல் முதலாக 76 வயது முதியவர் முதல் முதலாக கொரோனாவால் மரணம் அடைந்தார்.  தற்போது 1,17 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களைப் புதைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.   கொரோனாவா மரணம் அடைந்தோரைப் புதைக்கப் பல மயானங்களில் உள்ளோர் அனுமதிப்பது இல்லை.  உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைப்பது இல்லை.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் சைமன் ஹெர்குலிஸ் என்பவர் கொரோனாவால் மரணம் அடைந்த முதல் மருத்துவர் ஆவார்.   அவர் உடலைப் புதைக்கச் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அனுமதிக்கவில்லை.  அந்த பகுதியில் உள்ளவர்களில் நூற்றுக் கணக்கானோர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதன் பிறகு அந்த உடல் ஆறு கிமீ தொலைவில் உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது

அங்குள்ள மக்களும் உடலைப் புதைப்பதை எதிர்த்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஊழியரைக் கற்களாலும் கம்பாலும் தாக்கினார்கள்.   மறைந்த சைமனின் நண்பர்கள் எப்படியோ சமாளித்து அடுத்த நாள் காலை அமைதியாக உடலைப் புதைத்தனர். ஆனால் அவரது குடும்பத்தில் இருந்து யாரும் உயிர் அச்சம் காரணமாக அங்கு வர முடியாத நிலை உண்டானது.

இவ்வாறு கொரோனாவால் மரணம் அடைந்தோர் குடும்பங்களின் துயரை  நீக்க தன்னார்வு தொண்டு நிறுவனமான தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முன் வந்துள்ளது.  இந்த அமைப்பு எவ்வித ஜாதி மத பாரபட்சமின்றி இதுவரை கொரோனாவால் மரணமடைந்தோர் 1100 பேருக்கு மேற்பட்டோர் உடல்களைப் புதைத்துள்ளது.   மரணம் அடைந்தோரின் குடும்பத்தினர் அவரவர் வழக்கப்படி ஈமச் சடங்குகள் செய்யவும் இந்த அமைப்பு உதவி செய்துள்ளது.

இவர்கள் இதுவரை நடத்தி உள்ள 1100க்கும் அதிகமான ஈமச் சடங்குகளில் ஒன்றில் கூட யாரும் குறை கூறவில்லை.   கொரோனாவால் மரணம் அடைந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்வதோடு இவர்கள் சேவை நின்று விடவில்லை.  இதற்கு முன்பு இருந்தே ஆதரவற்று மரணம் அடைந்து அடையாளம் காணாமல் போன உடல்களை புதைக்கும் பணியிலும்  அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் பலருக்கு இவர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.  மேலும் புற்று நோயால் இறந்தவர்களுக்குப் பிரேத பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பில்லை எனச் சான்றிதழ் கிடைக்கவும் உதவி உள்ளனர்.  இந்த அமைப்பில் உள்ள 22 முதல் 40 வயது வரையிலான சுமார் 1000 இளைஞர்கள் தங்களைக் குறித்து எவ்வித விளம்பரமும் செய்துக் கொள்ளாமல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது சேவை குறித்துத் திருப்பத்தூர் மாநில காவல்துறை சூப்பிரண்ட் விஜயகுமார். “கொரோனா நோயாளிகளின் சடலங்களைப் புதைக்கும் இவர்கள் பணி மிகவும் புனிதமானது  இவர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிப்படி  ஒவ்வொரு சடலத்தையும் 8 அடிக்கும் அதிகமான ஆழமான  குழிகளில் புதைக்கின்றனர்.  இறுதிச் சடங்கின் போது பிபீ உடைகள் அணிகின்றனர்.   எங்கள் மாவட்டத்தில் நிகழ்ந்த கொரோனா மரணத்தில் 40% உடல்களை இந்த அமைப்பினர் புதைத்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி : ரூரல் இந்தியன் ஆன்லைன் – PEOPLE ARCHEVE OF RURAL INDIA