Random image

கட்சிப் பணிக்கு தொண்டர்களை நிர்பந்தம் செய்வது கிடையாது…..ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்

டில்லி:

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் பணியாற்றுமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தப்படுவது கிடையாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். சார்பில் ‘‘எதிர்கால இந்தியா’’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கம் டில்லியில் நேற்று தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகத் பேசுகையில், ‘‘ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக மட்டும் பணியாற்றுமாறு தொண்டர்களை நாங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டது கிடையாது. தேசிய ஆர்வத்தில் பணியாற்றி வருபவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கூறி வருகிறோம்.

ஆர்.எஸ்.எஸ் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறது. ஆனால், தேசிய நலன்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டுள்ளோம்’’என்றார். முன்னதாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகத் காங்கிரஸஅ கட்சியை பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.