வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சென்னை:

மிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்த லுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது. மேலும் 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது.

இன்று 7வது கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது. வரும் 19ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும்  வாக்குகள் எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியில்  அம்மா மாளிகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையத்தின் சிறப்பு அதிகாரிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கக்கு  பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முறை வாக்குப்பதிவின்போது, தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வி.வி.பேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும்  பயன்படுத்தப்பட்டன.

ஏற்கனவே  வாக்கு எண்ணிக்கையுடன் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் பணியாளர்களுக்கு அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நிகழாதவாறு வாக்குகள் எண்ணப்படு குறித்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி, இணைத் தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.