ஐதராபாத் நகர் பெயர் மாற்றமா ? யோகியின் அதிர்ச்சிப் பேச்சு

கோஷாமகால், தெலுங்கானா

ஐதராபாத் நகரை பாக்யநகர் என பெயர் மாற்ற விரும்பினால் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என உ.பி. முதல்வர் யோகி கூறி உள்ளார்.

                                   ராஜாசிங் லோத் – யோகி ஆதித்யநாத்

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள இஸ்லாமியப் பெயர் கொண்ட நகரங்களை பழைய பெயருக்கு மாற்றுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் அவ்வாறு பெயர் மாற்றம் செய்வது அதிகமாக நடைபெற்று வருகிறது. உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தல் பிரசாங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

வரும் 7 ஆம் தேதி தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாஜகவுக்கு ஆதரவாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று கோஷாமால் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக உள்ள ராஜா சிங் லோத் ஐ ஆதரித்து யோகி பிரசாரம் செய்தார்.

அப்போது யோகி, “ராஜா சிங்குக்கு பிரசாரம் செய்யவே நான் குறிப்பாக தெலுன்க்கானா வந்துளேன். அதற்கு காரணம் அவர் ஐதராபாத் நகரை பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்வதற்கான பணியை மேற்கொள்ள உள்ளார். ஐதராபாத் நகரை பாக்யநகராக மாற்ற விரும்பினால் தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்க்ள் பாஜகவும் வாக்களிக்க வேண்டும்.” என பேசி உள்ளார்.

ஏற்கனவே வடக்கு மாநிலங்கள் பலவற்றில் பாஜக அரசு தொடர்ந்து பெயர்களை மாற்றி வருகின்றது. அந்நிலை தென் இந்தியாவிலும் தொடர உள்ளதை குறிப்பிடுவதாக யோகி அதித்யநாத் பேச்சு உள்ளதால் மக்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.