சென்னை,

ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேளையில் டிடிவி தரப்பினர் நூதன முறையை கையாள்வதாக நேற்று இரவு பத்திரிகை.காம் இணைய இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நூதன பண விநியோகம் குறித்து முதன் முதலாக செய்தி வெளியிட்டது பத்திரிகை.காம் இணை இதழ்.

அதில், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, டிடிவி தரப்பினர் ரூ.20 நோட்டுக்களை விநியோகித்து வருவதாகவும், அதில் உள்ள சீரியல் எண்ணின்படி வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒரு ஓட்டுக்கு 12 ஆயிரம் பணம் விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, 20 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் காரணமாக பல இடங்களில் போலீசார் சோதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஏராளமான புத்தம் புதிய  20 ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே அதிமுக சார்பில் ஓட்டுக்கு 6 ஆயிரம் வீதம் கொடுக்கப்பட்டு விட்ட நிலையில் திமுகவும் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், டிடிவி தரப்பினரும் தங்களது பங்குக்கு அதிமுகவினர் கொடுத்தைவிட இரு மடங்கு தருவதாக உறுதி அளித்து அதன்படி பண விநியோகம் செய்ய இந்த நூதன முறையை கையாண்டுள்ளனர்.

பணம் விநியோகிக்கும்போது வாக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரே, இந்த நோட்டை கொடுத்தால், அதற்கான பணம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த  புகாரின்பேரிலேயே 15 நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்களிடமிருந்து விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த  பாகம் எண், ஏஜண்ட் எண் போடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்த தகவலை வெளி உலகத்துக்கு அறிவித்து, பண விநியோகத்தை தடுத்தது பத்திரிகை.காம் இணை இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

https://patrikai.com/new-technic-10-and-20-rupees-notes-rounds-in-rk-nagar/