6வதுகட்ட தேர்தல்: 7மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் 62.27 சதவிகித வாக்குப்பதிவு

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று, 6வது கட்டத் தேர்தல் நாடு முழுவதும் 7 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 6 மணி வரையில் 62.27  சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது, அதிகப்பட்சமாக மேற்கு வங்காளத்தில் 80.16 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

பீகார்  – 59.29 சதவிகிதம்

அரியானா  – 65.48 சதவிகிதம்

ஜார்க்கண்ட்  – 64.50சதவிகிதம்

மத்திய பிரதேசம் – 62.06 சதவிகிதம்

உத்தரபிரதேசம் – 54.24  சதவிகிதம்

மேற்குவங்காளம் – 80.16 சதவிகிதம்

டெல்லி – 58.01 சதவிகிதம்

இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் முக்கிய தலைவர்களான  உத்தர பிரதேச முன் னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்  மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்ததலைவர் திக்விஜய் சிங், டில்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கிரிக்கெட் வீரர் கவுதம் போன்றோர் களத்தில் உள்ளனர். ‘

இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.