தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கல்வித்தகுதியை அறியும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. கல்வித்தகுதி குறித்த தவறான விபரங்களை அளிக்கும் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
supreme_court
 
வேட்பாளரின் கல்வித்தகுதியை அறியும் உரிமை ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு. தங்களது சரியான, முழுமையான கல்வித்தகுதி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டியது வேட்பாளர்களின் கடைமை என்று நீதியரசர்கள் ஏ.ஆர்.டேவ், மற்றும் எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அறிவுறுத்தியுள்ளது.
இத்தீர்ப்பு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி ஆகியோரின் கல்வித்தகுதிகளைக் குறித்த கேள்விகளுக்கு விடைதரும் என்று நம்பப்படுகிறது.
மணிப்பூர் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மைரெம்பம் பிரிதிவிராஜ், பிரிதிவிராஜ் சிங் மற்றும் புக்ரெம் ஷரத்சந்தர சிங் ஆகியோர் தாக்கல் செய்த அப்பீலுக்கான விசாரணையில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பிரிதிவிராஜ் என்பவர் மைசூர் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றதாக தவறான தகவல் அளித்ததாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அவர் செய்த அப்பீலை விசாரித்த உச்ச நீதி மன்றம் மணிப்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என்று சொல்லி தீர்ப்பளித்தது.