சென்னை:

ந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதற்கு முன்னோட்டமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதை பூத் ஏஜண்டுகள் சரிபார்த்தனர். அதைத்தொடர்ந்து 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்று நடைறும்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக , திமுக, பாஜ, நாம் தமிழர் கட்சிகள் உள்பட சுயேச்சையாக டிடிவி தினகரன் மற்றும்  59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு திரண்டனர்.

ஏராளமான பெண்கள் காலை 7 மணி முதலே வாக்களிக்க ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர்.

இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பு, டிடிவி டில்லி கோர்ட்டில் ஆஜர், ஜெ.சிகிச்சை வீடியோ வெளியீடு போன்ற பரபரப்பாக சூழ்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28ஆயிரத்து 234பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 258வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள், மாற்று எந்திரங்கள் என மொத்தம்
1178 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

295கட்டுப்பாட்டுக் கருவிகளும், 320ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் (விவிபேடு) வாக்குச்சாவடி களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 59வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள், விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியிலும் ஒட்டப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளப் பாதை ஆகியன உள்ளன.  அனைத்து வாக்குச்சாவடிகளுமே சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படு கின்றன.

அனைத்து வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணைராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலக் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்படுவது போன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முன்னிட்டு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நிலை யில், வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கு, தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து ஆர்.கே.நகர் பகுதியில் 3300 போலீசாரும், 950 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பதிவாகும் வாக்குகள் 24ந்தேதி எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவர் யார் என்று அறிவிக்கப்படும்.