சத்திஸ்கர் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் 2வது கட்ட வாக்குப்பதிவு

ராய்ப்பூர்:

த்தீஸ்கர் மாநில சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று 2வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாவோயிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம் உள்ள சத்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு,  சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு மாவோ யிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்தும், அதை மீறி வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

90 சட்டமன்ற தொகுதிகளை சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த  12ம் தேதி 18 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இன்று மீதமுள்ள 72 தொகுதிகளுக்கும் இன்று  2வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கியதுமே பெரும்பாலான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.  தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஈடுபடலாம் என எண்ணி  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  ஹெலிகாப்டர்கள்,  டிரோன்கள் மூலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றர்.

வாக்குப்பதிவுக்காக 19 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமார் 1.5 கோடி வாக்காளர்கள்  இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.