மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா:

ம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று  பஞ்சாத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேற்குவங்காள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உள்ளாட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்களை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாரதியஜனதா கட்சியினர்ட கம்யூனிஸ்டு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில்,இன்று தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்து உள்பட   38,605 இடங்களில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களான அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 34 சதவிகித இடங்களை போட்டியின்றி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.