சென்னை:

ப்ரல் 18ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் லோக்சபதா தேர்தல் 7 கட்டங்களை நடைபெற உள்ளன. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ந்தேதி தொடங்கும் நிலையில், 7வது கட்ட தேர்தல் மே 19ந்தேதி முடிவடைகிறது. அதையடுத்து ஏப்ரல் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக் சபா தொகுதிகளுடன் 18 சட்டமன்ற தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி  தொடங்கிய நிலையில் இன்றுடன் முடி வடைந்தது. தொடக்கத்தில் மந்தமாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் போகப் போக சூடு பிடித்தது. கடந்த 2 நாட்களில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

25ந்தேதி நிலவரப்படி,  தமிழ்நாட்டில் உள்ள 39  லோக்சபா தொகுதிகளுக்கும் சேர்த்த்து  613 வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதிக பட்சமாக தென்சென்னை தொகுதியில் 28 பேர், திருவண்ணாமலையில் 27 பேர், சேலத்தில் 25 பேர், நாமக்கல்லில் 24 பேர், ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலியில் தலா 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதுபோல  18 சட்டசபை இடைத்தேர்தலுக்கு  நேற்று மாலை வரை 232 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிக பட்சமாக 36 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். ‘

வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது. ன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதுகுறித்த முழுவிவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

நாளை (27-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (28, 29-ந்தேதி) 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

மாற்று வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். 29-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இதற்கான அவகாசம் உள்ளது.

29-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். அன்றைய தினமே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்களும், மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கி அறிவிக்கப்படும்.

அதன்பிறகே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம் அறிவிக்கப்படும்.